கோவை மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு டெங்கி காய்ச்சல் பாதித்திருப்பது
உறுதி செய்யப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம்
மருத்துவமனையில் காய்ச்சல் அறிகுறிகளுடன் இவர்கள்
அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களின் ரத்தத்தை ஆய்வு செய்த மருத்துவர்கள்
டெங்கி காய்ச்சல் தாக்கியிருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து 6 பேர்
மேட்டுப்பாளையம் மருத்துவமனையிலும் ஒருவர் கோவை அரசு மருத்துவமனையிலும்
சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-விஸ்வநாதன்