நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குன்னூர்- உதகை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
வெலிங்டன் ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட இந்த மண் சரிவால், குன்னூர்-
உதகை ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. மேட்டுப்பாளையத்திலிருந்து
உதகை செல்லும் மலை ரயில் குன்னூர் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது.
அதனால், சுற்றுலா பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாயினர்.
தொடரும் மழையால் குன்னூர், மேட்டுப்பாளையம் பகுதிகளில் பல இடங்களில்
சிறு பாறைகள் விழத் தொடங்கியுள்ளன. மழை நீடிக்கும் பட்சத்தில் நிலச்சரிவு
ஏற்படும் அபாயமும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேனி.K.ராஜா