தொடர் மின் வெட்டைக் கண்டித்து, கோவையில் சிறு மற்றும் குறு தொழில்
முனைவோர், தொழிற்சாலைகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.
தினமும் 16 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் மின்வெட்டால், கடும்
பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இன்று காலை, சட்டைகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து பேரணியாக புறப்பட்ட
நூற்றுக்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு தொழில் முனைவோர் தொழிற்சாலை
தொழிற்சாலையாக சென்று கருப்புக் கொடி ஏற்றினர். மின்வெட்டுப் பிரச்னை
இன்னும் நீடித்தால், தொழில் நகரம் என்ற பெயரை கோவை இழந்து விடும் என்று
அவர்கள் கவலை தெரிவித்தனர்.
-இணைய செய்தியாளர் - s.குருஜி
-இணைய செய்தியாளர் - s.குருஜி