அதிக இறக்குமதி காரணமாக தீபாவளி சமயத்தில் எண்ணெய், பருப்பு வகைகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
இந்தியாவுக்கு இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து பாமாயில்
அதிகமாக இறக்குமதி செய்யப்படுவதால் விலை குறைந்து வருகிறது. கடந்த வாரம் 68
ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பாமாயில் தற்போது 56 ரூபாயாக
குறைந்துள்ளது.
தென் அமெரிக்கா, ரஷ்யா, உக்ரைன் போன்ற வெளிநாடுகளிலும், குஜராத்,
மத்தியபிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களிலும்
சூரியகாந்தி அமோகமாக விளைந்துள்ளதால் 88ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட
சூரியகாந்தி எண்ணெய் தற்போது 79 ரூபாய்க்கு விற்பனை
செய்யப்படுகிறது. இதேபோல் கடந்த வாரம் 120 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ
தேங்காய் எண்ணெய் தற்போது 95 ரூபாயாக குறைந்துள்ளது.
வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை சரியான நேரத்தில் பெய்ததால், அங்கு
பருப்பு வகைகள் விளைச்சல் அமோகமாக நடந்துள்ளது. அதனால் கடந்த வாரம் 80
ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ துவரம் பருப்பு தற்போது 75
ரூபாயாக குறைந்துள்ளது. இதேபோல் உளுந்தம் பருப்பு 70ரூபாயில் இருந்து
62ரூபாயாக குறைந்துள்ளது.
பாசி பருப்பின் விலை 80ரூபாயில் இருந்து 70ஆகவும், கடலை பருப்பின் விலை
78ல் இருந்து 72 ரூபாயாகவும் குறைந்துள்ளது. இதேபோல் சர்க்கரை விலையும்
கிலோவிற்கு 4ரூபாய் குறைந்து 36 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த
விலை வீழ்ச்சி பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-தேனி முருகேஸ்